கேரளத்திலிருந்து கோழிகளை இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் இல்லை என்றும், பரவாமல் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரிகளுடன் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் இன்று (ஜன.2) காலை ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், மத்தியப் பிரதேசத்திலுள்ள கோழி வளர்ப்புப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை.
பறவைக் காய்ச்சல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளத்திலிருந்து கோழிகளை இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது என்று கூறினார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


