சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரூர்கேலா இரும்பு ஆலையில் விஷவாயு கசிவு: 4 தொழிலாளர்கள் பலி

ஒடிசா மாநிலம், ரூர்கேலா இரும்பு ஆலையில் நச்சு வாயு கசிவு ஏற்பட்டதன் காரணமாக நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

News image

crude_steel_2709chn_1

Updated On :6 ஜனவரி 2021, 9:51 pm

ஒடிசா மாநிலம், ரூர்கேலா இரும்பு ஆலையில் நச்சு வாயு கசிவு ஏற்பட்டதன் காரணமாக நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

ஒப்பந்த தொழிலாளர்கள் நான்கு பேர் வழக்கம்போல் இன்று காலை நிலக்கரி இரசாயனத் ஆலையில் ஸ்டார் கன்ஸ்ட்ரக்ஷன் பணியில் ஈடுபடு வந்தனர். தொழிலாளர்கள் 10 பேர் பணியிலிருந்தபோது திடீரென நச்சு வாயு கசிந்துள்ளது. 

இதைச் சுவாசித்த 4 தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, இஸ்பத் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சிலர் முச்சுத்தினறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இறந்தவர்கள் கணேஷ் சந்திர பைலா (55), ரவீந்திர சாஹு (59), அபிமன்யு ஷா (33), பிரம்ஹானந்த பாண்டா (51) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை சாதாரணமாக செயல்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.