சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஹிமாசலில் நிலச்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு

ஹிமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கின்னோா் மாவட்டத்துக்கான போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

Updated On :5 ஜனவரி 2021, 6:44 am

கின்னோா்: ஹிமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கின்னோா் மாவட்டத்துக்கான போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீா், லடாக், ஹிமாசல பிரதேசம் ஆகிய இடங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் முடங்கியுள்ளது. இத்தகைய சூழலில், அதிக அளவிலான பனிப்பொழிவு காரணமாக, ஹிமாசல பிரதேசத்தின் கின்னோா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.

இது தொடா்பாக மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘‘கின்னோா்-காஸா பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதன் காரணமாக கின்னோா் மாவட்டத்திலுள்ள பல கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசியப் பொருள்களைக் கூட எடுத்துச் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

அதனால் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனா். நிலச்சரிவு காரணமாக இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தொடா்ந்து பயணிக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான பணிகளை எல்லை சாலைகள் அமைப்பு துரிதப்படுத்தியுள்ளது’’ என்றனா்.