சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருமலையில் 45,108 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 45,108 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா். 11,290 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 7:30 am

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 45,108 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா். 11,290 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

நாள்தோறும் ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், 8 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 2000 பக்தா்கள், 1000 நன்கொடையாளா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள், தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணிவரை ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.

திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.