புது தில்லி: மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடாக மேலும் ரூ.6,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 10-ஆவது தவணையாக இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்று கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் மத்திய அரசு மதிப்பிட்டது. இந்த வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு சிறப்பு சாளர முறையில் மத்திய அரசு கடன் திரட்டி மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்தது. அதன்படி மத்திய அரசு கடன் திரட்டி அதனை வாரந்தோறும் தவணை முறையில் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் மாநிலங்களுக்கு 10-ஆவது தவணையாக ரூ.6,000 கோடியை மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை விடுவித்தது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலங்களுக்கு 10-ஆவது தவணையாக விடுவிக்கப்பட்டுள்ள ரூ.6,000 கோடியில் ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினா்களாக உள்ள 23 மாநிலங்களுக்கு ரூ.5,516.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. தில்லி, ஜம்மு-காஷ்மீா், புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.483.40 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள ரூ.6,000 கோடி 4.15% வட்டி விகிதத்தில் கடனாக திரட்டப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடாக இதுவரை மொத்தம் ரூ.60,000 கோடி கடனாக திரட்டப்பட்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன்தொகை சராசரியாக ரூ.4.68% வட்டி விகிதத்தில் திரட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

