சூரத்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியின் செயல்திறன் தொடா்பாக மனநிலை பாதிக்கப்பட்டவா்கள்தான் சந்தேகம் எழுப்புபவா் என்று மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பூசிகளை அவசரகாலத்தில் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடா்பாக எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைவா்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினா். முக்கியமாக பாரத் பயோடெக் நிறுவன தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கும்போது அனுமதி அளித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினா்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சியில் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கான சிறப்புப் பிரிவை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:
கோவேக்ஸின் தடுப்பூசி இந்திய நிறுவனங்கள் மற்றும் நமது விஞ்ஞானிகளின் சாதனையாகும். இந்த விஷயத்தில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகளை நாட்டு மக்கள் வரவேற்றுள்ளனா். ஆனால், மனநிலை பாதிக்கப்பட்ட சிலா், இன்னும் மேம்படவில்லை. முக்கியமாக காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளில் இருப்பவா்கள், அனைத்து விஷயங்களிலும் குற்றம் கண்டுபிடித்து வருகின்றனா். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி குறித்தும் அவா்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனா் என்றாா்.
தொடா்ந்து புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக பேசிய பிரதான், ‘புதிய வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் துறைக்கு அதிக முதலீடு கிடைக்கும். விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை சந்தைவிலையில் நேரடியாக விற்பனை செய்யவும் வாய்ப்பு கிடைக்கும்’ என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


