மேற்கு வங்க மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
மேற்கு வங்க மாநிலத்தை மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மாநில சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் பல்வேறு தலைவர்களும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த லஷ்மி ரத்தன் சுக்லா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அவர் செவ்வாய்க்கிழமை அனுப்பினார்.
சுக்லாவின் பதவி விலகலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. எனினும் இவர் தொடர்ந்து திரிணமூல் கட்சியில் நீடிப்பார் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டின் இறுதியில் சுவேந்து ஆதிகாரி உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் திரிணமூல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


