சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மத்திய அமைச்சரவை நாளை (ஜன.6) கூடுகிறது

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜனவரி 6) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜனவரி 2021, 12:08 am

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜனவரி 6) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 29ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் செவ்வாயன்று அறிவித்தது. ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 வரை முதல் அமர்வாகவும், மார்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை இரண்டாம் அமர்வாகவும் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இந்நிலையில் காணொலி வாயிலாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பூசி நிலை, விவசாயிகள் போராட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவற்றைக் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.