சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உடல்நலம் குன்றிய நிறுவன முன்னாள் ஊழியரை சந்தித்த ரத்தன் டாட்டா!

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாட்டா, இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாத நிறுவன முன்னாள் ஊழியரின் வீட்டிற்குச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

News image

முன்னாள் ஊழியரின் வீட்டில் ரத்தன் டாட்டா

Updated On :6 ஜனவரி 2021, 12:24 am

இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாட்டா, உடல்நலம் சரியில்லாத நிறுவன முன்னாள் ஊழியரின் வீட்டிற்கு நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாத ஊழியரின் உடல்நிலை குறித்து நேரில் சென்று கேட்டறிந்தார். இதற்காக அவர் மும்பையிலிருந்து புனே பயணித்துள்ளார். 

முன்னாள் ஊழியரை சந்தித்து நலம் விசாரித்த அவர், குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளையும், குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்பதாக உறுதி அளித்துள்ளார். 

83 வயதான ரத்தன் டாட்டா இந்த சந்திப்பு குறித்து ஊடகத்திற்கு தெரியாமல் பார்த்துள்ளார். ஆனால், முன்னாள் ஊழியரின் வீட்டிற்குச் சென்ற ரத்தன் டாட்டாவின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. பலரும் இதனை பகிர்வதுடன் ரத்தன் டாட்டாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.