உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங் இன்று தனது 89 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
'ஸ்ரீ கல்யாண் சிங் ஜி அவர்களிடம் பேசியதுடன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். பொதுசேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தியவர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். அவர் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை பெற வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய கல்யாண் சிங் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பின்னர் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010-ஆம் ஆண்டு கல்யாண் சிங் தனிக்கட்சி தொடங்கினார். இக்கட்சி 2013-இல் கலைக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து, 2014-ஆம் ஆண்டில் அவருக்கு ராஜஸ்தான் மாநில ஆளுநர் பதவியை பாஜக அளித்தது. 2019ல் அவரது பதவிக்காலம் முடிந்ததையடுத்து அவர் மீண்டும் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

