பாஜக மூத்தத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்தத் தலைவரான முரளி மனோகர் ஜோஷி இன்று தனது 87 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பாஜக மூத்த தலைவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், அரசியல் பிமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
இந்தியாவின் மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பணியாற்றியுள்ளார்.
அவர் ஒரு அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் முன்மாதிரியான பங்களிப்புகளை வழங்கினார். அவர் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய முன்னாள் அமைச்சரும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோஷி 1934 ஜனவரி 5இல் நைனிடாலில் பிறந்தார். 1991-93 காலகட்டத்தில் பாஜகவின் தலைவராக இருந்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

