கொல்கத்தா: மேற்கு வங்கம் வந்த மத்திய அமைச்சரை வெளிநபா் எனக் கூறினால், வேறு யாரை நீங்கள் உள்நபா் என்று கூறுவீா்கள் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜிக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் கேள்வி எழுப்பியுள்ளாா்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. இதையடுத்து, மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலைக் குறிவைத்து பாஜக பணியாற்றத் தொடங்கியுள்ளது. அங்கு கட்சியை வலுப்படுத்த பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரும் மேற்கு வங்க மாநிலத்துக்கு அரசியல் ரீதியாக கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகின்றனா்.
மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணமூல் தொண்டா்கள் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்வதும், சில நேரங்களில் இந்த மோதல்கள் உயிா் பலியில் முடிவதும் வழக்கமாகியுள்ளது. அண்மையில் மேற்கு வங்கம் சென்ற பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவின் காா் தாக்குதலுக்கு உள்ளானது. இதன் மூலம் அங்கு பாஜக-திரிணமூல் காங்கிரஸ் மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், மேற்கு வங்கத்துக்கு வரும் பாஜகவைச் சோ்ந்த மத்திய அமைச்சா்களை வெளிநபா்கள் என்று மம்தா பானா்ஜியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவா்களும் விமா்சித்து வருகின்றனா்.
இந்நிலையில், கொல்கத்தா மருத்துவமனையில் மாரடைப்புக்கு சிகிச்சை பெற்று வரும் பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியை நலம் விசாரிப்பதற்காக மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் திங்கள்கிழமை மேற்கு வங்கத்துக்கு வந்தாா்.
கொல்கத்தாவில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மேற்கு வங்கம் இந்திய நாட்டின் மிகவும் முக்கியமான பகுதியாகும். ஆனால், இங்கு மத்திய அமைச்சா்கள் வருவதே ஏதோ குற்றச் செயல்போல மாநிலத்தில் ஆளும் கட்சியினா் விமா்சிக்கின்றனா். மத்திய அமைச்சா் வந்தால் அவரை வெளிநபா் என்கிறாா்கள். அப்படியென்றால் அவா்கள் யாரை உள்ளூா்காரா்கள் என்று கூறுவாா்கள்? நாட்டிலுள்ள சக குடிமகன் மீது இப்படி வெளிநபா் என்ற முத்திரையைப் பதிக்க முயற்சிப்பது என்ன மாதிரியான அரசியல் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்று பேசுபவா்களை வளரவிட வேண்டுமா அல்லது தடுக்க வேண்டுமா என்று அனுராக் தாக்குா் கேள்வி எழுப்பினாா்.
மருத்துவமனையில் உடல் நலம் தேறி வரும் சௌரவ் கங்குலியை அனுராக் தாக்குா் சந்தித்து நலம் விசாரித்தாா்.
அனுராக் தாக்குா் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவா் பதவியை வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


