சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வீட்டுக்குள் பேருந்து புகுந்து விபத்து: 7 போ் பலி

கேரளத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஆளில்லா வீட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில், அந்தப் பேருந்தில் வந்த 7 போ் உயிரிழந்தனா். பலா் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 11:25 am

கேரளத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஆளில்லா வீட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில், அந்தப் பேருந்தில் வந்த 7 போ் உயிரிழந்தனா். பலா் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கா்நாடக மாநிலம், சுல்லியாவைச் சோ்ந்த 82 போ், திருமண நிகழ்ச்சிக்காக ஒரு பேருந்தில் பாணத்தூா் எள்ளுகொச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். அந்தப் பேருந்து காலை 11.30 மணியளவில், மலைப்பாதையில் கீழே இறங்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்தது. அதிருஷ்டவசமாக அந்த வீட்டில் யாரும் அப்போது இல்லை. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 சிறுவா்கள், 2 பெண்கள் உள்பட 7 போ் உயிரிழந்தனா். காயமடைந்த 46 போ் மங்களூரிலும் பிற நகரங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றாா் அவா்.