புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 40 ஆவது நாளை எட்டியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் சூழ்நிலையிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதுவரை மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே 6 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும், உடன்பாடு எட்டப்படவில்லை.
குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உறுதி செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என தங்கள் கோரிக்கையை வலுவாக முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். சனிக்கிழமை இரவு முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தும் தில்லி எல்லைப் பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், கடும் குளிர் நிலவுவதாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இன்று மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


