பிகாரில் தற்போது ஏழு மாவட்ட மருத்துவமனைகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் இயங்கி வரும் அக்கா உணவகம் வெற்றிபெற்றதை அடுத்து, மற்ற மாநிலங்களில் இயங்கி வரும் அரசு உணவகங்களையும் அவர்களிடமே ஒப்படைக்க நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது என்பதை செயல்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: விமான நிலையத்துக்கு புதிய ரயில் சேவை
முதல் முறையாக வைஷாலி மாவட்ட மருத்துவமனையில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் அக்கா உணவகம் (தீதீ கி ரசோய்) ஏற்படுத்தப்பட்டது. இது பிறகு கயா, பூர்ணியா உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
கடந்த 2020 நவம்பர் மாதம் அக்கா உணவகம் தரப்பில் ஆர்பிஐயுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, தற்போது தினமும் 50 ஆர்பிஐ ஊழியர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றும் பிகார் மாநில ஊரக மேம்பாட்டுத் துறை செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் மகளிர் சுய உதவிக் குழுவினர், தற்போது மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இயங்கும் உணவகங்களை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் சுய உதவிக் குழுப் பெண்கள் அனைவரும் இந்த உணவகத்தின் ஊழியர்கள் அல்ல. அவர்கள் அந்த அமைப்பின் கூட்டாளிகளாக செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாத ஊதியத்தோடு, ஆண்டு இறுதியில் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்டப் பங்கும் அவர்களுக்கு வழங்கப்படும் என்று பாலமுருகன் கூறியுள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

