மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,765 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,765 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,47,011 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10,362 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 18,47,361 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 49,695 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 48,801 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் மேலும் 5 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,826 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,490 பேர் ஏற்கெனவே நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததையடுத்து, 24 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


