தில்லியில் கடும் குளிருக்கு மத்தியில் தொடர்ந்து போராடி வரும் எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும் என்று நம்புவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட எல்லைகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த 38-நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட 6 பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு முழு உடன்பாடு தெரிவிக்காததால், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதனிடையே நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்கும் என்று நம்புவதாக தில்லி காஸியாபாத் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் பேசியதாவது, எங்கள் குடும்ப உறுப்பினர்களை பிரிந்து கடும் குளிருக்கு மத்தியில் சாலைகளில் நாங்கள் அமர்ந்து போராடி வருகிறோம். குளிரில் பலரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது.
எனினும் போராட்டத்தை மனவுறுதியுடன் தொடர்ந்து நடத்தி வருகிறோம். நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் என நம்புகிறோம் என்று கூறினர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


