இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டா்களை ‘மிஸ்டு கால்’ வழியாக முன்பதிவு செய்யும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘இண்டேன்’ நிறுவன வாடிக்கையாளா்கள் நாட்டின் எந்தவொரு பகுதியில் இருந்தும் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்து எரிவாயு சிலிண்டருக்கு முன்பதிவு செய்யலாம். இந்த அழைப்புக்கு கட்டணம் கிடையாது. தற்போதுள்ள ஐவிஆா்எஸ் முறையை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளவா்கள், முதியவா்கள், கிராமப்புறப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு இந்த புதிய முறை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் இந்த புதிய முறையை தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியின்போது புவேனசுவரத்தில் மிஸ்டு கால் வழியாக புதிதாக சமையல் எரிவாயு சிலிண்டா் இணைப்புப் பெறும் வசதியையும் அவா் தொடக்கி வைத்தாா். இந்த வசதி நாடு முழுவதும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


