வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக குடியரசுத் தினத்தில் தில்லியில் பேரணியில் ஈடுபடுவோம் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளில் இதுவரை உறுதியான முடிவுகள் எட்டப்படாமல் உள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஜனவரி 23ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ஆளுநர்களின் குடியிருப்புகளை நோக்கி டிராக்டர் அணிவகுப்பு மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தனர்.
மேலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் தில்லியில் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் பேரணி நடைபெறும் என தெரிவித்தனர். இந்தப் பேரணியில் தில்லியைச் சுற்றியுள்ள மாநில விவசாயிகள் கலந்து கொள்ளவும், நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பங்களின் சார்பில் குடும்பத்திற்கு ஒருவரும் கலந்து கொள்ளவும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


