தில்லியில் கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் பரவல் மூன்றாவது அலை வீசி வந்தது. அரசின் தொடர் நடவடிக்கைகளால் கரோனா பரவல் விகிதம் தில்லியில் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 494 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.26 லட்சமாக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து இதுவரை மொத்தமாக 6,10,535 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 5,342 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு 10,571 பேர் உயிரிழந்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


