புது தில்லி: புத்தாண்டு தினத்தன்று தில்லியில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, 1.1 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை குறைந்துள்ளது.
இந்தக் குளிா்கால சீசனில் இதுவே குறைந்தபட்ச வெப்பநிலை என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது கடந்த 15 ஆண்டுகளில் மிகக் குறைவானது என்றும் கடந்த ஜனவரி 8, 2006 அன்று தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 0.2 டிகிரி செல்சியஸ் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1935 ஜனவரியில் பதிவான மைனஸ் 0.6 டிகிரி செல்சியஸ் மிகவும் குறைவான வெப்பநிலை ஆகும். குறைவான வெப்பநிலை காரணமாக தில்லியில் கடும் பனி மூட்டம் நிலவியது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் குளிரிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


