புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 37 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் சூழ்நிலையிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதுவரை மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே புதன்கிழமை தொடர்ந்து 6 ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உறுதி செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என தங்கள் கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளனர்.
வருகிற ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என்று கிசான் மஸ்தூர் சன்ஹர்ஷ் கமிட்டி உறுப்பினர் சுக்விந்தர் சிங் தெரிவித்தார்.
எங்களிடம் 6 மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் உள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் மின்சார சட்டம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்தால் நாங்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்குவோம் என்று அரசு நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது' என்று தெரிவித்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


