நாடு முழுவதும் புத்தாண்டு 2021-ஐ மக்கள் உற்சாகமுடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு புதிய நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்று கோயிகளிலும், தேவாலயங்களிலும், பள்ளி வாசல்களிலும் மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் லஷ்மி நரசிம்மர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டையொட்டி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் ஆத்யபித் காளி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விரைவில் கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்று வேண்டியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
பிகார் மாநிலம் பாட்னாவில் மஹாவீர் கோயிலில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. 2021-ம் ஆண்டின் முதல் வழிபாட்டில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை சித்தி விநாயகர் ஆலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள தங்கக் கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடி புத்தாண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். கடும் குளிரையும் பொருள்படுத்தாமல், ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.
மேற்கு வங்க ஹூக்ளி நதிக்கரையிலும், ஒடிசா, கோவா கடற்கரையிலும் 2021-ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தை வரவேற்று மக்கள் புத்தாண்டை கொண்டாடினர்.
கேரளம், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தேவாலயங்களில் மக்கள் நள்ளிரவு முதலே சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
நாகூர் தர்காவிலும், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களிலுள்ள பள்ளி வாசல்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


