சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆந்திரத்தில் 326, கர்நாடகத்தில் 877 பேருக்கு கரோனா

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.

News image

கோப்புப்படம்.

Updated On :2 ஜனவரி 2021, 3:11 am

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.

ஆந்திரம்:

ஆந்திரத்தில் புதிதாக 326 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 8,82,612 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,238 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 8,72,266 பேர் குணமடைந்துள்ளனர், 7,108 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகம்:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 877 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 9,20,373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,97,200 பேர் குணமடைந்துள்ளனர், 12,096 பேர் பலியாகியுள்ளனர். 11,058 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.