சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார்.

News image

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா

Updated On :1 ஜனவரி 2021, 8:33 pm

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார்.

நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சாமானியர்கள் தொடங்கி பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டின் டிசம்பர் 13ஆம் தேதி பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட அவர் தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நட்டா கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார். தனது சுட்டுரைப் பதிவில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், “கரோனா நோயின் போது பிரார்த்தனை மற்றும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் இப்போது கரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டுள்ளோம். இந்த சவாலான காலங்களில் அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவளித்த டாக்டர் ரன்தீப் குலேரியா மற்றும் அவரது குழுவினருக்கு நாங்கள் முழு மனதுடன் நன்றி கூறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.