சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் சாவு

ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

Updated On :12 செப்டம்பர் 2013, 8:05 am

ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

ஸ்ரீநகரில் இருந்து 52 கி.மீ. தூரத்தில் உள்ள úஸாபியான் நகரை அடுத்த கக்ரான் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மத்திய ரிசர்வ் போலீஸ் படை நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். இதைக் கண்டித்து அங்குள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் முகாம் அருகே அப்பகுதி மக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

அந்த முகாமை அங்கிருந்து அகற்றும்படி முழக்கமிட்டனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸாரைக் கைது செய்யும்படி கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, போராட்டக்காரர்களைக் கலைக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ரபீக் அகமது ரத்தார் என்ற இளைஞர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து போராட்டக்காரர்கள் úஸாபியான் நகரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்தனர். கலவரத்தைத் தடுக்க அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன.

முன்னதாக அங்கு கடந்த 3 நாள்களாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை காலை விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும், úஸாபியான் நகரில் அனைத்துக் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடின.

இதற்கிடையே, போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அப்துல்லா ஹாருன் என்பது தெரியவந்தது.