சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

எதிரிகளை வசைபாடும் பணியில் காங்கிரஸ் ஈடுபடாது: ராகுல் காந்தி

காங்கிரஸ் தனது எதிரிகளை வசைபாடும் பணியில் ஈடுபடாது என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2013, 8:16 am

காங்கிரஸ் தனது எதிரிகளை வசைபாடும் பணியில் ஈடுபடாது என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தானின் சலும்பர் நகரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அவர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் பேசியதாவது:

இங்கு ஒருவர் (மோடி) வந்து, நம்மைப் பற்றி கிண்டலடித்துள்ளார். நாம் யாரைப் பற்றியும் தவறாகப் பேசுவதில்லை. எதிர்க்கட்சிகள் நம் மீது தாக்குதல் நடத்தலாம். நம்மை வசைபாடலாம். அது அவற்றின் உரிமை. அவர்கள் நம்மை கேலியும் செய்யலாம். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கப்பட்டும்.

எதிர்க்கட்சிகள் நம்மை எவ்வளவு விமர்சித்தாலும் பிரச்னையில்லை. நாம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் காங்கிரஸ் படைவீரர்களான நாம் நாட்டுக்காகப் பாடுபடுகிறோம். நாட்டின் கனவே நமது கனவாகவும் உள்ளது. நாட்டில் உள்ள ஏழை மக்களுக்காக நாம் போராடி வருகிறோம். எனது கனவுகளை ஒதுக்கிவிட்டு, உங்கள் கனவுகளை எனதாக்கிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தியா என்பது பல்வேறு மலர்கள் அடங்கிய பூங்கொத்து என்று நாம் கருதுகிறோம். அனைத்து மலர்களும் (மதங்களும்) பிரகாசிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஹிந்து, முஸ்லிம், சீக்கியர், ஆதிவாசி என்று அனைவரையும் அரவணைத்துச் செல்ல நாம் விரும்புகிறோம். ஆதிவாசிகளின் குலையும் செவிகொடுத்துக் கேட்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

ஆனால், எதிர்க்கட்சியோ (பாஜக) ஏழைகளைச் சுமையாக நினைக்கிறது. இந்த நாடானது, ஏழை மக்களின் வியர்வையாலும் ரத்தத்தாலும் உருவாக்கப்பட்டதாக நாம் நினைக்கிறோம் என்றார் ராகுல் காந்தி.