நிலத் தகராறில் மேற்கு வங்க அமைச்சர் ஒருவர் பிணைக் கைதியாக 8 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், மாநில விலங்குகள் நலத் துறை அமைச்சருமான நூர் ஆலம் செüத்ரிக்கும், ஒரு மசூதியின் நிர்வாகத்துக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது.
இதில் காயமடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், பிர்பும் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியின் அறையில் போட்டு பூட்டியது. காலை 11.30 மணி முதல் இரவு 8 மணி வரை, பிணைக் கைதியாக அவர் சிறை வைக்கப்படிருந்தார்.
கல்லூரிக் கட்டத்தை சேதப்படுத்திய அந்தக் கும்பல் அறைகலன்களுக்கும், கணினிகளுக்கும் தீவைத்தது. கல்லூரி முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் சேதப்படுத்தியது. அமைச்சரை விடுவிப்பதற்காக, அந்தக் கல்லூரி மற்றும் மசூதியின் நிர்வாகத்தினருடன், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைச்சர் விடுவிக்கப்பட்டார். அவர் உடனடியாக சூரியில் உள்ள விருந்தினர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பிர்பும் மாவட்டம், தொகல்பட்டி கிராமத்தில் செüத்ரியின் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை, ஒரு மசூதி ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த நிலத்தில் பெண்கள் கல்லூரி கட்டப்பட்டுள்ளதாகவும் கூறி, இரு தரப்புக்கும் நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

