தனி தெலங்கானா மாநிலம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய சமூகநலத்துறை அமைச்சர் பல்ராம் நாயக் தெரிவித்தார்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க சனிக்கிழமை மாலை திருமலைக்கு மத்திய அமைச்சர் பல்ராம் நாயக் வந்தார். அவரை திருப்பதி திருமலை தேவஸ்தான உயர் அதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வரும் 12ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தனி தெலங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
தெலங்கானாவை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துவது வீண். தனி தெலங்கானா மாநிலம் உருவாகப் போவதாக அறிவித்ததை மத்திய அரசு திரும்பப் பெறும் நிலையில் இல்லை.
மேலும் ஹைதராபாத் என்பது ஆந்திரத்தில் வசிக்கும் அனைவருக்கும் பொதுவானதாகும். யாரும் யாரையும் வெளியில் அனுப்ப உரிமை இல்லை.
அப்படி யாராவது அதைத் தடுத்தால் அதற்காக போராடாமல் மத்திய அமைச்சர் அந்தோனி தலைமையிலான கமிட்டியிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு புகார் தெரிவிக்கும்போது அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

