திருமலையில் ஒருங்கிணைக்கப்பட்ட லக்கேஜ் மையத்தை தேவஸ்தான இணை செயல் அதிகாரி சீனிவாசராஜு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
திருமலைக்கு வரும் பகதர்கள் தங்கள் உடைமைகள், செல்போன்கள், பாதணிகள் முதலியவற்றை வைக்க திருமலை முழுவதும் தேவஸ்தானம் 8 கவுன்ட்டர்களை ஏற்படுத்தி உள்ளது.
பக்தர்கள் தங்கள் உடைமைகளை எங்கு வைக்கிறார்களோ அங்கே சென்று திரும்ப பெற வேண்டும்.
இதனால் பக்தர்கள் பெறும் சிரமத்துக்கு உள்ளாவதை அறிந்து திருமலையில் உள்ள பழைய அன்னதான கூடத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட லக்கேஜ் மையத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது. இதனால் பக்தர்கள் தங்களது லக்கேஜ் செல்போன் மற்றும் பாதணிகளை எங்கு கொடுத்தாலும் ஒருங்கிணைக்கபட்ட மையத்தில் (பிஏசி4) பெற்றுக்கொள்ளலாம்.
இதை தேவஸ்தான செயல் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
ரூ. 300, ரூ.50 மற்றும் சுபதம் கவுன்ட்டர்கள் அருகில் கொடுத்தவர்கள் கவுன்ட்டர் எண் 5லும், ஏஐசி டிஸ்பென்சரி அருகில் கொடுத்தவர்கள் கவுன்ட்டர் எண் 8லும் வைகுண்டம் கியூ காம்பளக்ஸ் மற்றும் எஸ்எம்சி அருகில் கொடுத்தவர்கள் கவுன்ட்டர் 9 மற்றும் 10லும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
இன்னும் 15 நாட்களுக்குள் இது முழு அளவில் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

