சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சுத்திகரிப்பு ஆலை தீ விபத்து: சாவு எண்ணிக்கை 23 ஆக உயர்வு

விசாகப்பட்டினத்தில் சுத்திரிகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் நான்கு பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதையடுத்து இந்தத் தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

Updated On :2 செப்டம்பர் 2013, 4:38 am

விசாகப்பட்டினத்தில் சுத்திரிகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் நான்கு பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதையடுத்து இந்தத் தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

இறந்தவர்களில் மூன்று பேர் விசாகப்பட்டினத்திலுள்ள மருத்துவமனையிலும், மற்றொருவர் மும்பையிலுள்ள மருத்துவமனையிலும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது பெயர்கள் பின்வருமாறு: கே. டாடா ராவ் (60), எம்.வி. ரமணா (45), சாம்பு மன்னா (55) மற்றும் சுபாஷ் மாஜி (25).

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துக்குச் சொந்தமான சுத்திகரிப்பு ஆலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டபோது, தனியார் ஒப்பந்த நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆலையின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ""இந்த விபத்தில் உயிரிழந்த 23 பேரில், குளிரூட்டும் பிரிவின் பொறுப்பாளரான முரளி மட்டும்தான் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன ஊழியர். மற்றவர்கள் அனைவரும் தனியார் ஒப்பந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்'' என்று தெரிவித்தார்.

தற்போது விசாகப்பட்டினத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தீ விபத்தில் காயமடைந்த 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எட்டுபேர் விமானம் மூலம் மும்பை அழைத்து செல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.