நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான காணமல்போன கோப்புகளைத் தேடும் பணியில் நிலக்கரித் துறை அமைச்சக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாட்டுக்கு ரூ.1.86 லட்சம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை தொடர்பாக நிலக்கரி துறை அமைச்சகத்திடம் சிபிஐ கோரிய பல ஆவணங்கள் மாயமாகியுள்ளன. முறைகேட்டில் தொடர்புடையவர்களை தப்ப வைக்கவே ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன.
இதனால் மத்திய அரசுக்கு, முக்கியமாக நிலக்கரி துறை அமைச்சகத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக சிபிஐ கோரிய கோப்புகளில் காணாமல் போனவற்றைத் தேடி வருகிறோம். அவை விரைவில் கண்டுபிடித்து சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் மாநிலங்களவையில் உறுதியளித்துள்ளார்.
நிலக்கரி சுரங்க வழக்கு விசாரணையை கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றமும் கோப்புகள் மாயமானது தொடர்பாக அதிருப்தியடைந்துள்ளது.
இந்த விவகாரத்தில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது நிலக்கரி துறை அமைச்சக அதிகாரிகள்தான். காணாமல் போய்விட்டதாக கூறப்படும் கோப்புகளை தேடிப்பிடிக்கும் பணியில் நிலக்கரி துறை அமைச்சக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் போன ஆவணங்களை, நிலக்கரித் துறை அமைச்சக அதிகாரிகள் அமைச்சகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இது சாத்தியமில்லாத பணியாகவே கருதப்படுகிறது.
கோல் இந்தியா நிறுவனத்திடம் இருந்து ஒரு சில ஆவணங்களை மீண்டும் பெற முடியும் என்பதால் அந்நிறுவனத்தின் உதவியையும் நிலக்கரி துறை அமைச்சகம் நாடியுள்ளது.
"1993 முதல் நடைபெற்ற நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு எழுந்ததாகக் கூறப்படுவது குறித்து 3 தொடக்கநிலை விசாரணை அறிக்கைகள், 13 முதல் தகவல் அறிக்கைகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. தொடக்கநிலை விசாரணை அறிக்கையை பதிவு செய்த பின்பு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு அசல் ஆவணங்களை சிபிஐ கோரியது.
சுமார் ஒன்றரை லட்சம் பக்கங்களுக்கும் மேலான ஆவணங்களைக் கொண்ட 769 கோப்புகளை நிலக்கரித் துறை வழங்கியுள்ளதாகக் தெரிகிறது. 2004-ம் ஆண்டுக்கு முந்தைய காலங்களில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு கோரி, இதுவரை ஒதுக்கீடு பெறாத பல்வேறு நிறுவனங்கள் தொடர்பான 157 விண்ணப்பங்கள், கோப்புகளை சிபிஐ கோரியுள்ளது. ஆனால் அவை மாயமாகியுள்ளன.
இந்த கோப்புகள் குறித்து ஆராய நிலக்கரித் துறை கூடுதல் செயலர் தலைமையில் அமைச்சக குழுவை கடந்த ஜூலை 11-ஆம் தேதி அமைக்கப்பட்டது. இக்குழு இதுவரை இருமுறை கூடியுள்ளது. எனினும் கோப்புகளை கண்டறிவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. இப்பிரச்னை மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

