சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாஜகவில் இணைந்தது ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சியுடன் சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான ஜனதா கட்சி ஞாயிற்றுக்கிழமை இணைந்தது.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 7:13 am

பாரதிய ஜனதா கட்சியுடன் சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான ஜனதா கட்சி ஞாயிற்றுக்கிழமை இணைந்தது.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோர் முன்னிலையில், இந்த அறிவிப்பை சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டார்.

முன்னதாக, ராஜ்நாத் சிங் வீட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுடன் சுப்பிரமணியன் சுவாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கட்சியில் சுப்பிரமணியன் சுவாமி இணைவதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி ராஜ்நாத் சிங் கூறுகையில், ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, பாரதிய ஜனதா கட்சியும், ஜனதா கட்சியும் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அவரது கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன். சுப்பிரமணியன் சுவாமியும், அவரது கட்சியும் பாரதிய ஜனதாவில் இணைந்திருப்பது பலனளிக்கும் என்று நம்புகிறேன். அவரை வரவேற்கிறேன் என்றார் சிங்.