உணவுப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்காது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை விவாதத்துக்கு வரவுள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தில்லியில் அவர் பத்திரிகையாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி வருமாறு: உணவுப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்காது. அந்த மசோதாவை ஆதரிப்போம்.
பல ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தும், காங்கிரஸ் கட்சியால் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியாதது துரதிருஷ்டவசமாகும். ஏழைகளுக்கு அடிப்படை உணவைக் கூட காங்கிரஸால் அளிக்க முடியவில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தவறான ஆட்சியின் காரணமாகவே, ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர். தில்லியில் மட்டும் ஒரு கோடி பேர் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழ்கின்றனர்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் வறுமை முழுவதுமாக ஒழிக்கப்படும் என்றார் ராஜ்நாத் சிங்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

