திருமலைக்கு வரும் பஸ்கள் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்படுகின்றன.
தனி தெலங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாள்களுக்கு மேல் நடந்து வரும் போராட்டம் இப்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் திருமலைக்கு பஸ் சேவை நிறுத்தப்படவில்லை. இந்த நிலையில் திருமலைக்கு நள்ளிரவு 12 மணிக்கு மேல் முழு அளவில் பஸ் சேவை நிறுத்தப்பட உள்ளது.
இதுவரை வரலாற்றிலேயே இடம் பெறாத ஒன்றாக திருமலைக்கு செல்லும் பஸ்கள் சேவை நிறுத்தப்படவுள்ளது. இது குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு திருப்பதி போக்குவரத்து கழக மேலாளர் மகேஷ்வர ராவிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை பலன் தரவில்லை. திருமலைக்கு பஸ்களை இயக்க மாட்டோம் என்று போக்குவரத்துத் துறையினர் உறுதியாக தெரிவித்துள்ளனர். மேலும் திங்கள்கிழமை நடைபெற உள்ள போராட்டத்தில் தேவஸ்தான ஊழியர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் தேவஸ்தானம் திருமலைக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் எனத் தெரியவந்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

