தெலங்கானா மாநிலம் உருவாக ஒப்புதல் அளித்துள்ளது மேலும் புதிய மாநிலங்கள் மட்டுமின்றி புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கான கோரிக்கைகளை ஊக்குவிக்கும் என்றும், இது நாட்டை பலவீனப்படுத்தும் என்றும் சமூக சேவகர் அண்ணா ஹசாரே கூறினார்.
வலுவான ஜன லோக்பால் மசோதாவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக அவர் மேற்கொண்டுவரும் ஜனதந்திர யாத்திரையின்போது பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
தெலங்கானா மாநிலத்தை உருவாக்க அரசு தொடங்கியுள்ள நடவடிக்கைகள் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்ல, புதிய மாவட்டங்களுக்கான கோரிக்கைகளையும் வலுப்படுத்தும். இது நாட்டை பலவீனப்படுத்தவே செய்யும்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி சக்தி நாக்பாலின் தாற்காலிக பணிநீக்கம் துரதிருஷ்டவசமானது. அவரைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் கிடைப்பது அரிது என்பதால் உத்திரப் பிரதேச அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
ஜன லோக்பால் மசோதாவைக் கொண்டுவரக் கோரி வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளில் உண்ணாவிரதத்தைத் தொடங்குவேன். அந்த மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராடுவேன் என்றார் அண்ணா ஹசாரே.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

