முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருடன் அரசியல் தரகர் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல் பதிவுகளைக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காததற்காக வருமான வரித் துறைக்கும் மத்திய புலனாய்வுத் துறைக்கும் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் அடங்கிய சிறப்பு அமர்வு மேற்பார்வையிட்டு வருகிறது.
முக்கியப் பிரமுகர்களுடன் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல் பதிவுகளை வெளியிட வேண்டும் என்று மக்கள் வழக்காடு மையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இந்த அமர்வின் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் நியமித்திருந்த ஆறு பேர் கொண்ட நிபுணர் குழு "நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகளில் சில, சட்டரீதியாக விசாரணைக்கு உள்படுத்தக் கூடியவைதான்' என்று அறிக்கை அளித்திருந்தது.
அந்த அறிக்கையை நீதிபதிகள் பரிசீலித்த போது, தொலைபேசி உரையாடல் பதிவை வெளியிடக்கூடாது என்று டாடா நிறுவன முன்னாள் தலைவர் ரத்தன் டாடா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே ஆட்சேபம் தெரிவித்தார்.
"தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்கும் அதிகாரத்தை வருமான வரித் துறையும், மத்திய கண்காணிப்பு ஆணையமும் தவறாகப் பயன்படுத்துகின்றன. அதைத் தடுக்க சில வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும்' என்று அவர் கூறினார்.
இத்தொலைபேசி உரையாடல் பதிவு தொடர்பாக கருத்துத் தெரிவித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எஸ். சந்தியோக், "நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவை பொதுப்படையாக வெளியிடவில்லை.
அதைக் கோருபவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி விண்ணப்பித்து உரிய விளக்கத்தைப் பெறலாம்' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீரா ராடியா தொலைபேசி உரையாடலில் இடம் பெற்ற அம்சங்கள் குறித்து அதைப் பதிவு செய்தவர்கள் உயரதிகாரிகளுக்கு தெரிவித்தார்களா? அவ்வாறு தெரிவித்திருந்தால் அதன் மீது இத்தனை ஆண்டுகளாக ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் சில மட்டும்தான் அலைக்கற்றை வழக்குடன் தொடர்புடையவை என்று சிபிஐ கூறுகிறது. அதைக்
கொண்டு இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகுதான், நீரா ராடியா உரையாடல் விவகாரத்தில் தனிப்பட்ட உரையாடல் என்ற வரம்பைக் கடந்து பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டிருந்தது தெரிய வருகிறது.
இந்த உரையாடல் பதிவுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வருமான வரித் துறை, சிபிஐயின் போக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.
இந்த வழக்கு விசாரணை வரும் 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. அதற்குள் இரு துறைகளும் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

