சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

முலாயம் வழக்கு: "சிபிஐ-யை தவறாக பயன்படுத்தும் காங்கிரஸ்'

ஆட்சியில் நீடிப்பதற்காக காங்கிரஸ் கட்சி, சி.பி.ஐ. அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

Updated On :22 ஜூலை 2013, 7:50 am

ஆட்சியில் நீடிப்பதற்காக காங்கிரஸ் கட்சி, சி.பி.ஐ. அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் சொத்துக்குவிப்பு வழக்கை முடித்துக் கொள்ள சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ""ஆட்சியில் நீடிப்பதற்காக காங்கிரஸ் கட்சி, சி.பி.ஐ. அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துகிறது.

ஏராளமான ஆதாரங்கள் இருந்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் பவன்குமார் பன்சால் போன்ற காங்கிரஸ் தலைவர்களை சி.பி.ஐ. காப்பாற்றியது. அதேபோல், அரசியல் சமன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கூட்டணிக் கட்சிகளை நெருக்கடியில் வைப்பது அல்லது அவர்களுக்கு நற்சான்றிதழ் அளிப்பது என்ற விதத்தில் சி.பி.ஐ. செயல்படுகிறது'' என்றார்.

இதேபோல், பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் வெங்கய்ய நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அதுல் அஞ்சான் ஆகியோரும் சி.பி.ஐ.யின் செயல்பாட்டைக் குறை கூறினர்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.