ஹெலிகாப்டர் ஒப்பந்த பேரம் தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் சிலவற்றை பாதுகாப்புத் துறை அமைச்சகம் சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது.
முக்கியப் பிரமுகர்களுக்கான 12 சொகுசு ஹெலிகாப்டர் வாங்குவதற்காக, இத்தாலி-பிரிட்டன் நிறுவனமான அகஸ்டா வெஸ்லேண்டுடன் ரூ.3,600 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்திய அரசிடமிருந்து இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக ரூ.360 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் அதன் தாய் நிறுவனமான இத்தாலியைச் சேர்ந்த ஃபின்மெக்கனிக்காவின் முன்னாள் தலைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக இத்தாலியில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. லஞ்சம் பெற்றது யார் என்பதைக் கண்டறிய இந்தியாவிலும் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்திய விமானப்படை தலைமை தளபதி எஸ்.பி. தியாகிமற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களைத் திரட்டுவதற்காக, இத்தாலியின் மிலன் நகர நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்புத் துறை தலைமை இயக்குநர் தலைமையிலான உயர்நிலைக் குழு சென்றிருந்தது. ஒப்பந்த விதிகள் மீறப்பட்டுள்ளதா என்று ஆராய்வதற்காக, இத்தாலி நீதிமன்றத்திலிருந்து திரட்டப்பட்ட ஆவணங்களை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

