ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதி பேரறிவாளனின் மனுவை மத்திய தகவல் ஆணையம் நிராகரித்துள்ளது.
தனது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததற்கான காரணத்தை கேட்டு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், மத்திய தகவல் ஆணையத்துக்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார்.
இந்த நிலையில், இந்த மனுவை நிராகரித்து மத்திய தகவல் ஆணையர் சுஷ்மா சிங் பிறப்பித்த உத்தரவில், "கருணை மனு விவகாரங்களில் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை, அதிகாரிகளின் குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டே குடியரசுத் தலைவர் முடிவு செய்கிறார். இது தொடர்பான விவரங்களை அரசியல் சாசன விதி 74(2)-ன்படி வெளியிட முடியாது. இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றமும் ஒரு வழக்கில் சுட்டிக் காட்டியுள்ளது.
மத்திய தகவல் ஆணையமும் அரசியல் சாசன விதிகளுக்கு உள்பட்டதாகும். எனவே, தாங்கள் கேட்ட தகவலை வழங்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

