சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

"சிங்குர் நிலத்தை விவசாயிகளிடமே அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்'

மேற்கு வங்க மாநிலம் சிங்குரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்று டாடா நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :12 ஜூலை 2013, 9:29 am

மேற்கு வங்க மாநிலம் சிங்குரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்று டாடா நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நானோ கார் தொழிற்சாலையை நிறுவ சிங்குரில் டாடா நிறுவனம், குத்தகைக்கு நிலத்தைக் கையகப்படுத்தியது. ஆனால் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அங்கு தொழிற்சாலை அமைக்கும் முடிவை டாடா கைவிட்டது.

இந்நிலையில், நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்கும் நோக்கில் மேற்கு வங்க அரசு சார்பில், சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதனை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எச்.எல்.தத், தீபக் மிஸ்ரா ஆகியோர், புதன்கிழமை அளித்த தீர்ப்பு விவரம்: கார் தொழிற்சாலை தொடங்குவதற்காகவே சிங்குரில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

ஆனால் இப்போது அந்த தொழிற்சாலை வேறு இடத்தில் அமைக்கப்பட்டு விட்டது. எனவே நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்கு அளிப்பது குறித்து டாடா நிறுவனம் பரிசீலிக்க வேண்டும்.

நிலத்தை கையப்படுத்தும் போது எவ்வளவு பணம் அளிக்கப்பட்டதோ, அதை திரும்பத் தருவதை உறுதி செய்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு மேற்கு வங்க அரசிடம் நீதிமன்றம் வலியுறுத்தும். இது தொடர்பாக டாடா நிறுவனம் தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.