தென்கொரிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 8 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மத்தியப் பிரதேச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்தத் தவறும்பட்சத்தில் கூடுதலாக மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்கொரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா வந்தார். உமாரியா மாவட்டம் பந்தவ்கார் என்ற இடத்தில் உள்ள சுற்றுலா விடுதியில் (ரிசார்ட்) தங்கியிருந்தார்.
அந்த விடுதியின் மேலாளரான தீபக் விஷ்வகர்மா அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு உமாரியா மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி அகிலேஷ் பாண்டியா செவ்வாய்க்கிழமை மேற்கண்டவாறு தீர்ப்பு அளித்தார். வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ், தீபக் விஷ்வகர்மாவுக்கு மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிபதி, அதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

