திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது 18 என்று இருப்பதைப் போலவே, சொந்த மனைவியாக இருந்தாலும் 18 வயதுக்குப் பிறகே உடலுறவு கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று "ஐ-தாட்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மனைவி 15 வயதுக்குக் குறைவாக இல்லாமல் இருந்தால் - அதாவது 15 வயதாகியிருந்தால் - அவருடைய சம்மதத்துடன் உடலுறவு கொள்ளலாம் என்று இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 375-ஆவது பிரிவுக்கு, சமீபத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்தே தன்னார்வத் தொண்டு நிறுவனம் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது.
இந்த மனு நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் வழக்குரைஞர் விக்ரம் ஸ்ரீவாஸ்தவ் ஆஜரானார்.
"மேஜர்' என்பதற்கான வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களின் ஒப்புதலுடன் பாலுறவு வைத்துக் கொள்வதற்கான வயதையும் 18 ஆக நிர்ணயிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என விக்ரம் கேட்டுக் கொண்டார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

