சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாதின் மனு தள்ளுபடி

கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் ஒன்றை வேறு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு ராஷ்ட்ரீய

Updated On :2 ஜூலை 2013, 7:02 am

கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் ஒன்றை வேறு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மனுக்களை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிராசாத் யாதவ் மீது ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

சிறப்பு நீதிபதி பிரவஸ் குமார் சிங் முன் நடைபெற்று வந்த மாநில கால்நடைத்துறை தொடர்பான ஒரு வழக்கை வேறு சிறப்பு நீதிபதியைக் கொண்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு லாலு பிரசாத், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது சார்பில் மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி கடந்த மாதம் 28ஆம் தேதி வாதாடினார். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் லாலுவின் மனுக்கள் மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது.  வழக்கை விசாரித்த நீதிபதி,  லாலுவின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

முன்னதாக, ஜூலை 1ஆம் தேதிக்குள் மாநில கால்நடைத்துறை தொடர்பான வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றம் லாலு உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கில் வரும் 15ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தது.