அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை கடந்த நான்கு நாள்களில் மட்டும் 37 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரில் இமயமலையில் அமர்நாத் குகைக்கோயில் உள்ளது. இங்குள்ள குகையில் இயற்கையாக பனி லிங்கம் உருவாகும். ஒரு சில மாதங்கள் மட்டுமே பனி லிங்கம் காணப்படும். இந்தப் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். தற்போது அமர்நாத் யாத்திரை தொடங்கியுள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அமர்நாத் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். கடந்த நான்கு நாள்களில் மட்டும் 37 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 35,627 பேரும், திங்கள்கிழமை காலை 1,600-க்கு மேற்பட்டவர்களும் தரிசனம் செய்துள்ளனர்.
தவிர திங்கள்கிழமை காலை 1044 யாத்திரிகர்கள் ஹெலிகாப்டரில் குகைக்கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இதனிடையே, பகவதி நகர் முகாமில் இருந்து 80 வாகனங்கள் 2,168 பக்தர்களை ஏற்றிக்கொண்டு பகல்காம் மற்றும் பல்டால் காஷ்மீர் முகாம்களுக்குச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். அங்கிருந்து அவர்கள் அமர்நாத்துக்கு பயணம் மேற்கொள்வர். 6,381 பக்தர்களை கொண்ட யாத்ரிகர்கள் குழு பல்டால் முகாமில் இருந்து திங்கள்கிழமை அமர்நாத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
இதுவரை ஜம்மு முகாமில் இருந்து மட்டும் மொத்தம் 9,974 பேர் அமர்நாத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

