சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உத்தரகண்ட் வெள்ளம்: இதுவரை 202 தமிழக யாத்ரிகர்கள் மீட்பு

உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழக யாத்ரிகர்களில் இதுவரை 202 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில், 83 பேர் வெள்ளிக்கிழமை தமிழகம் சென்றனடைந்தனர்.

Updated On :22 ஜூன் 2013, 6:53 am

உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழக யாத்ரிகர்களில் இதுவரை 202 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில், 83 பேர் வெள்ளிக்கிழமை தமிழகம் சென்றனடைந்தனர்.

மீதமுள்ளவர்கள் தில்லி தமிழ்நாடு இல்லத்தில் உணவு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பப்படுகின்றனர்.

இதற்கிடையே, உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், தமிழக வருவாய்த் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, வருவாய்த் துறை ஆணையர் டி.எஸ். ஸ்ரீதர் ஆகியோர் கொண்ட உயர்நிலைக் குழு உத்தரகண்ட் தலைநகர் டேராடூனுக்கு வெள்ளிக்கிழமை சென்றது.

இது தொடர்பாக, டேராடூன் சென்றுள்ள ஜக்கையன் கூறியது: ஹரித்வார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தில்லியில் உள்ள தமிழக அரசின் அவசர உதவி மையத்தை தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

வியாழக்கிழமை இரவு 83 யாத்ரிகர்கள் தில்லி வந்தனர். அவர்கள் வெள்ளிக்கிழமை காலை விமானத்தில் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், 119 தமிழக யாத்ரிகர்கள் வெள்ளிக்கிழமை தில்லிக்கு வந்தனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, உணவு, தங்குவதற்கான இடம் உள்ளிட்டவை அளிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படுவார்கள். ஹரித்வார், ரிஷிகேஷ் பகுதிக்கு வரும் தமிழக யாத்ரிகர்கள் தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள் என்று ஜக்கையன் கூறினார்.