சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மும்பை அடுக்குமாடி குடியிருப்பு விபத்து: சாவு 10 ஆக உயர்வு

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

Updated On :12 ஜூன் 2013, 6:27 am

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய மும்பை பகுதியில் மாஹிம் தர்கா என்ற இடத்தில் 4 மாடி குடியிருப்பு திங்கள்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. முதலில் ஒரு மூதாட்டி உயிரிழந்தது தெரியவந்தது.

இந்நிலையில் தொடர்ந்து இடிபாடுகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் மேலும் பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதையடுத்து இவ்விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மும்பை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.