இந்திய வீரர்கள் உதவியுடன், காங்கோ கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த 12 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
காங்கோ குடியரசு நாட்டில் அமைதிப் பணியில் ஈடுபடுவதற்காக ஐ.நா. அமைதிப்படையின் கீழ் இந்திய வீரர்களின் படைப்பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே வடக்கு கிவூ மாகாணத்தில் கிவாஞ்சா பகுதியில் 12 அப்பாவி மாணவர்களை கிளர்ச்சியாளர்கள் பிடித்துச் சென்று
விட்டனர்.
மாணவர்களுக்கு கொள்ளையர்களுடன் தொடர்பு உள்ளதாக கருதி கடந்த 5-ம் தேதி அவர்களை கிளர்ச்சியாளர்கள் பிடித்துச் சென்றனர். இந்நிலையில் அவர்களை மீட்க வலியுறுத்தி உள்ளூர் தலைவர்கள், தொண்டு நிறுவனத்தினர் இந்திய படைப்பிரிவிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மாணவர்களை மீட்பதற்காக சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக உள்ளூர் பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் மூலம் மாணவர்களை விடுவிக்க வேண்டும் என கிளர்ச்சியாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 5 மணி நேரத்தில் 2 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் தொடர் முயற்சியின் காரணமாக மீதமிருந்த 10 மாணவர்களையும் கிளர்ச்சியாளர்கள் விடுவித்தனர். இந்திய படை வீரர்களின் இம்முயற்சியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

