இந்திய மீனவர்களை கொன்றது தொடர்பான தங்கள் நாட்டு கடற்படை வீரர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் விசாரணையை துரிதமாக நடத்தும்படி மத்திய அரசிடம் இத்தாலி வலியுறுத்தி உள்ளது.
கேரள மாநில கடற்பகுதியில் இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்றதாக இத்தாலியைச் சேர்ந்த 2 கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை தில்லியில் நடந்து வருகிறது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறியதாவது: இத்தாலியின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஸ்டஃபான் டி மிஸ்டுரா இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை திங்கள்கிழமை இரவு சந்தித்து வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும்படி வலியுறுத்தினார்.
இந்திய நீதித்துறை தனக்கேற்ற வேகத்தில் தான் விசாரணையை மேற்கொள்ளும். அதற்கென உள்ள தனித்தன்மையுடன் விசாரணை நடைபெறும் என சல்மான் குர்ஷித் கூறினார் என்றார் அக்பருதீன்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

