இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி பி.பி.பாண்டேயின் மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
தற்போது தலைமறைவாகவுள்ள பி.பி.பாண்டே, தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். தனக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஞான சுதா மிஸ்ரா, மதன் பி.லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ""இந்த மனுவை நேரடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக முதலில் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும். எனவே, பி.பி.பாண்டேயின் மனுவை நிராகரித்து உத்தரவிடுகிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகர் அருகே இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி அக்பர் அலி ரானா, ஜீஸன் ஜோகார் ஆகியோர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்லத் திட்டமிட்டிருந்தனர் என்றும் உளவுத் துறை தகவல் தெரிவித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இது ஒரு போலி என்கவுன்ட்டர் என்று இஷ்ரத் ஜஹானின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பி.பி.பாண்டே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோது, அவர் காவல் துறை இணை ஆணையராக பதவி வகித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

